கிரிக்கெட்

சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன விராட் கோலி: வீடியோ வைரல் + "||" + Virat Kohli's Whistlepodu, Ravichandran Ashwin's Fifer & Rishabh Pant's Amazing Catch

சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன விராட் கோலி: வீடியோ வைரல்

சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன விராட் கோலி: வீடியோ வைரல்
சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன இந்திய கேப்டன் விராட் கோலியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை, 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பின்னர் இந்திய அணி நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்து இருந்தது. 

இதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. இங்கிலாந்து அணியினரின் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிய தொடங்கியதால் ரசிகர்கள் உற்சாகமானார்கள். அதே உற்சாகம் கேப்டன் விராட் கோலியையும் தொற்றிக்கொள்ள, விசில் அடிக்கச் சொல்லி ரசிகர்களை சைகையால் கேட்டார். 

மீண்டும் மீண்டும் கேக்கல என்று கூறியதால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஸ்டேடியம் முழுவதும் உற்சாக விசில் பறந்தது. கேப்டன் கோலியும் விசில் அடித்துக் கொண்டே இருந்தார். இதனால் ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர். இந்தக் காணொலி காட்சியை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க ஆட்டக்காரர்கள் யார்? விராட் கோலி பதில்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
2. இன்ஸ்டாகிராமில் 10கோடி பாலோயர்கள் ; விராட் கோலி சாதனை
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
3. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
4. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மான் கில், விராட் கோலி டக் அவுட்
இந்திய அணி உணவு இடைவேளை வரை 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
5. மகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா
நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படம் மற்றும் பெயரை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.