வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது


வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 14 Feb 2021 11:37 PM GMT (Updated: 14 Feb 2021 11:37 PM GMT)

வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட்இண்டீஸ் 409 ரன்னும், வங்காளதேசம் 296 ரன்னும் எடுத்தன.

டாக்கா, 

வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட்இண்டீஸ் 409 ரன்னும், வங்காளதேசம் 296 ரன்னும் எடுத்தன. இதனை அடுத்து 113 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 52.5 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 61.3 ஓவர்களில் 213 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 50 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ரகீம் கார்ன்வால் 4 விக்கெட்டும், ஜோமில் வாரிகன், பிராத்வெய்ட் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. வெஸ்ட்இண்டீஸ் வீரர் ரகீம் கார்ன்வால் ஆட்டநாயகன் விருதையும், கிருமா பொன்னெர் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். 

Next Story