கிரிக்கெட்

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 134 ரன்னில் சுருண்டது வலுவான நிலையில் இந்தியா + "||" + England rolled to 134 in the 2nd Test in Chennai

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 134 ரன்னில் சுருண்டது வலுவான நிலையில் இந்தியா

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 134 ரன்னில் சுருண்டது வலுவான நிலையில் இந்தியா
சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 134 ரன்னில் சுருண்டது. இந்திய அணி 249 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
சென்னை, 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்து இருந்தது. ரிஷாப் பண்ட் 33 ரன்களுடனும், அக்‌ஷர் பட்டேல் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரிஷாப் பண்ட், அக்‌ஷர் பட்டேல் ஆட்டத்தை தொடர்ந்தனர். இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சு தாக்குதலை தொடுத்தது. ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியது. முதல் ஓவரை ஜாக் லீச் மெய்டனாக வீசினார். அடுத்த ஓவரில் மொயீன் அலி சுழலை கிரீசை விட்டு முன்னால் இறங்கி விளையாட அக்‌ஷர் பட்டேல் (5 ரன்) முயற்சித்தார். ஆனால் பந்து அவரை ஏமாற்றி விட்டு விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் கையில் தஞ்சம் அடைந்தது. அவர் துரிதமாக செயல்பட்டு ‘ஸ்டம்பிங்’ செய்து ஆட்டம் இழக்க செய்தார். அடுத்து வந்த இஷாந்த் ஷர்மா (0) அதே ஓவரிலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவர் புல்டாசாக வந்த பந்தை அடிக்கையில் அது பேட்டின் விளிம்பில் பட்டு மேல் நோக்கி எழும்பி ரோரி பர்ன்சிடம் எளிதான கேட்ச்சாக மாறியது.

ரிஷாப் பண்ட் அரைசதம்

இதனை அடுத்து குல்தீப் யாதவ் களம் இறங்கினார். ஒரு புறம் விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தாலும், மறுமுனையில் ரிஷாப் பண்ட் அதிரடி காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தினார். அவர் ஜோ ரூட், மொயீன் அலி பந்து வீச்சில் சிக்சர் விளாசினார். ரிஷாப் பண்ட் 65 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவர் அடித்த 6-வது அரைசதம் இதுவாகும்.

இதைத்தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ஸ்டோனை, கேப்டன் ஜோ ரூட் பந்து வீச பணித்தார். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அவர் ஓரே ஓவரில் குல்தீப் யாதவ் (0), முகமது சிராஜ் (4 ரன்) விக்கெட்டுகளை காலி செய்தார். இருவரும் விக்கெட் கீப்பர் பென் போக்சிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்கள்.

இந்தியா 329 ரன்கள்

மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய அணி முதல் இன்னிங்சில் 95.5 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. ரிஷாப் பண்ட் 77 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு பக்கபலமாக யாரும் நிலைத்து நிற்காததால் பெரிய ஸ்கோர் குவிக்க முடியாமல் ஏமாற்றம் கண்டார். இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டும், ஆலி ஸ்டோன் 3 விக்கெட்டும், ஜாக் லீச் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் (0) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். நடுவரின் இந்த முடிவை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி இங்கிலாந்து செய்த அப்பீலுக்கு பலன் கிடைக்கவில்லை.

விக்கெட்டுகள் சரிவு

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்ததை கச்சிதமாக பயன்படுத்தி கொண்ட ஆர்.அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் இங்கிலாந்து அணியினருக்கு தொடர்ந்து கடும் நெருக்கடி அளித்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி (16 ரன்) அஸ்வின் பந்து வீச்சில் விராட்கோலியிடம் கேட்ச் ஆனார். அதற்கு அவுட் கேட்டு முறையிட்டும் நடுவர் கொடுக்க மறுத்து விட்டார். இதனை அடுத்து இந்திய அணியினர் டி.ஆர்.எஸ்.முறையில் அப்பீல் செய்து ‘அவுட்’ பெற்றனர். ரீப்ளேயில் பந்து பேட்டின் பின்புறத்தில் உரசி செல்வது தெளிவாக தெரிந்தது.

முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்திய கேப்டன் ஜோ ரூட் (6 ரன்) அக்‌ஷர் பட்டேல் பந்து வீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அறிமுக வீரரான அக்‌ஷர் பட்டேல் டெஸ்டில் வீழ்த்திய முதல் விக்கெட் இதுவாகும்.

இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது

இந்திய வீரர்களின் சுழல் மாயாஜாலத்தை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளைக்கு பிறகு முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 107 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் (14 ரன்) ஜாக் லீச் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ரோகித் சர்மா 62 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன்னும், புஜாரா 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்திய அணி முன்னிலை

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும். இந்திய அணி இதுவரை 249 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

ஸ்கோர்போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா

ரோகித் சர்மா (சி) மொயீன் அலி

(பி) லீச் 161

சுப்மான் கில் எல்.பி.டபிள்யூ.

(பி) ஆலி ஸ்டோன் 0

புஜாரா (சி) ஸ்டோக்ஸ்

(பி) லீச் 21

விராட்கோலி (பி) மொயீன் அலி 0

ரஹானே (பி) மொயீன் அலி 67

ரிஷாப் பண்ட் (நாட்-அவுட்) 58

அஸ்வின் (சி) போப்

(பி) ஜோ ரூட் 13

அக்‌ஷர் பட்டேல் ஸ்டம்பிங் (சி)

போக்ஸ் (பி) மொயீன் அலி 5

இஷாந்த் ஷர்மா (சி) பர்ன்ஸ்

(பி) மொயீன் அலி 0

குல்தீப் யாதவ் (சி) போக்ஸ்

(பி) ஆலி ஸ்டோன் 0

முகமது சிராஜ் ((சி) போக்ஸ்

(பி) ஆலி ஸ்டோன் 4

எக்ஸ்டிரா 0

மொத்தம் (95.5 ஓவர்களில்

ஆல்-அவுட்) 329

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-85, 3-86, 4-248, 5-249, 6-284, 7-301, 8-301, 9-325.

பந்து வீச்சு விவரம்

ஸ்டூவர்ட் பிராட் 11-2-37-0

ஆலி ஸ்டோன் 15.5-5-47-3

ஜாக் லீச் 27-3-78-2

பென் ஸ்டோக்ஸ் 2-0-16-0

மொயீன் அலி 29-3-128-4

ஜோ ரூட் 11-3-23-1

இங்கிலாந்து

ரோரி பர்ன்ஸ் எல்.பி.டபிள்யூ.

(பி) இஷாந்த் ஷர்மா 0

டாம் சிப்லி (சி) விராட்கோலி

(பி) அஸ்வின் 16

டேன் லாரன்ஸ் (சி) சுப்மான் கில்

(பி) அஸ்வின் 9

ஜோ ரூட் (சி) அஸ்வின்

(பி) அக்‌ஷர் பட்டேல் 6

பென் ஸ்டோக்ஸ்

(பி) அஸ்வின் 18

ஆலி போப் (சி) ரிஷாப் பண்ட்

(பி) முகமது சிராஜ் 22

பென் போக்ஸ் (நாட்-அவுட்) 42

மொயீன் அலி (சி) ரஹானே

(பி) அக்‌ஷர் பட்டேல் 6

ஆலி ஸ்டோன் (சி) ரோகித் சர்மா

(பி) அஸ்வின் 1

ஜாக் லீச் (சி) ரிஷாப் பண்ட்

(பி) இஷாந்த் ஷர்மா 5

ஸ்டூவர்ட் பிராட் (பி) அஸ்வின் 0

எக்ஸ்டிரா 9

மொத்தம் (59.5 ஓவர்களில்

ஆல்-அவுட்) 134

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-16, 3-23, 4-39, 5-52, 6-87, 7-105, 8-106, 9-131.

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா 5-1-22-2

அஸ்வின் 23.5-4-43-5

அக்‌ஷர் பட்டேல் 20-3-40-2

குல்தீப் யாதவ் 6-1-16-0

முகமது சிராஜ் 5-4-5-1

2-வது இன்னிங்ஸ்

இந்தியா

ரோகித் சர்மா (நாட்-அவுட்) 25

சுப்மான் கில் எல்.பி.டபிள்யூ.

(பி) லீச் 14

புஜாரா (நாட்-அவுட்) 7

எக்ஸ்டிரா 8

மொத்தம் (18 ஓவர்களில்

ஒரு விக்கெட்டுக்கு) 54

விக்கெட் வீழ்ச்சி:1-42.

பந்து வீச்சு விவரம்

ஆலி ஸ்டோன் 2-0-8-0

ஜாக் லீச் 9-2-19-1

மொயீன் அலி 7-2-19-0

தொடர்புடைய செய்திகள்

1. ஓடுதளத்தில் சறுக்கிச்சென்று விபத்தை சந்தித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஓடுதளத்தில் சறுக்கிச்சென்று சிறு விபத்தை சந்தித்தது.
2. இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வை தள்ளிவைக்க திட்டம்?
தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதால் ஊரடங்கு தளர்வை தள்ளிவைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
3. இங்கிலாந்தில் மேலும் 7,738- பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,125- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 258 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.