கிரிக்கெட்

யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு + "||" + FIR against Yuvraj Singh over casteist remarks against Yuzvendra Chahal

யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு

யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது. பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாகக் கூறி அரியானா போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சண்டிகார்

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், மற்றும் முன்னணி வீரர் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் மற்றொரு வீரர் குறித்து பேசுகையில் பட்டியல் சமூகத்தின் மனம் புண் படும் படியாக பேசியதாக வழக்கறிஞர் ரஜத் கல்சன் என்பவர் அரியானா மாநில ஹன்ஸி நகர போலீசில்  புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது போலீசார்  முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் ரஜத் கல்சன் கூறியதாவது:-

முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் லைவ்வின் போது மற்றொரு வீரரைக் குறிப்பிடுகையில் பட்டியலின சமூகத்தினர் மனம் புண் படியாக பேசியுள்ளார். அதோடு இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கன மக்கள் பார்த்துள்ளனர் .

எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 153ஏ, 295, 505 மற்றும் பட்டியலின பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை விரைவில் கைது செய்யக்கோரி ஹிசார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் வீரர் மொயின் அலி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட பிரபல பெண் எழுத்தாளர்
கிரிக்கெட் வீரர் மொயின் அலி குறித்து பிரபல பெண் எழுத்தாளர் சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார்.
2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார்.
3. விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை
இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து சாத்னை படைத்தது.
4. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
5. ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு
அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.