கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் லோகேஷ் ராகுல் முன்னேற்றம் + "||" + 20 over cricket: Lokesh Rahul improves batsmen rankings

20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் லோகேஷ் ராகுல் முன்னேற்றம்

20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் லோகேஷ் ராகுல் முன்னேற்றம்
20 ஓவர் சர்வதேச போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
துபாய், 

20 ஓவர் சர்வதேச போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 7-வது இடத்திலும் நீடிக்கின்றனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி 3 இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்திய அணி
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள், ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளனர்.
2. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான் நியமனம்
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா அறிகுறி: கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- மனைவி தனிமைப்படுத்தி கொண்டனர்
கொரோனா அறிகுறியையடுத்து கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- அவரது மனைவி தனிமைப்படுத்திக் கொண்டனர்.
4. ஐ.பி.எல். தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டமில்லை: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டம் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
5. இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ் குமாரின் தந்தை மரணம்
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.