சென்னை ரசிகர்களுக்கு கோலி புகழாரம் ‘கிரிக்கெட்டை நன்கு புரிந்தவர்கள்’


சென்னை ரசிகர்களுக்கு கோலி புகழாரம் ‘கிரிக்கெட்டை நன்கு புரிந்தவர்கள்’
x
தினத்தந்தி 17 Feb 2021 12:57 AM GMT (Updated: 17 Feb 2021 12:57 AM GMT)

சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் 3½ நாட்களுக்குள் இங்கிலாந்தை முடக்கிய பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

சொந்த நாட்டில் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடியது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முதல் இரு நாட்களில் களத்தில் எங்களுக்கு உத்வேகம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த டெஸ்டில் நிலைமை வேறு. ரசிகர்களின் வருகை மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டியில் மனஉறுதியுடன் போராடி திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதற்கு ரசிகர்களும் முக்கிய காரணம். ரசிகர்கள் பின்னால் இருக்கும் போது, ஒரு அணியாக மேலும் ஏதாவது சாதிக்க தூண்டும்.

சென்னை ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள் என்பது ஒவ்வொருவரும் அறிந்தது. கிரிக்கெட்டை நன்கு புரிந்தவர்கள். சில சமயம் ஒரு பவுலருக்கு 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை ரசிகர்களிடம் இருந்து உத்வேகமும், உற்சாகமும் கிடைக்க வேண்டும் என்றால் அதை பெற முயற்சிப்பதே ஒரு கேப்டனாக என்னுடைய பொறுப்பு.

இந்த டெஸ்டில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கவில்லை என்பதே உண்மை. ஏனெனில் 2-வது இன்னிங்சை நீங்கள் திரும்பி பார்த்தால், 3-வது நாளில் நாங்கள் சிறப்பாக விளையாடி ஏறக்குறைய 300 ரன்கள் எடுத்தோம். அதனால் டாஸ் சாதகமாக அமைந்தது என்று சொல்வது நியாயமற்றது.

இவ்வாறு கோலி கூறினார்.

Next Story