கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி + "||" + When Virat Kohli felt like the loneliest guy in the world

இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி

இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம்  ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
புதுடெல்லி

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸ் உடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி "வெறும் கிரிக்கெட் மட்டும்  அல்ல"  என்ற நிகழ்ச்சியின் மூலம் உரையாடினார். 

இதில் பேசும் போது  2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடிய போது தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக விராட் கோலி கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது:-

2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போது அந்த அணியுடனான தொடர் மிகவும் கடினமாக இருந்தது எனவும் தான் ஒரு கடினமான கட்டத்தை கடந்து சென்றேன். இதில் இருந்து எப்படி மீள்வது என புரியவில்லை. சில விஷயங்களில் இருந்து எப்படி கடந்து வருவது என்று சுத்தமாக தெரியவில்லை. இந்த உலகத்திலேயே தனித்து விடப்பட்ட நபர் போன்று அப்போது உணர்ந்தேன்.

நீங்கள் ரன்கள் எடுக்க முடியாது என்பதை அறிந்து எழுந்திருப்பது ஒரு பெரிய உணர்வு அல்ல, சில கட்டங்களில் நீங்கள் எதையும் கட்டுப்படுத்த முடியாது என்று அனைத்து பேட்ஸ்மேன்களும் உணர்ந்ததாக நான் நினைக்கிறேன்.ஒரு நபரின் வாழ்க்கையை மன அழுத்தத்தால் அழிக்க முடியும்

மனநல பிரச்சினைகளுடன் பலரும் நீண்ட காலமாக போராடுகின்றனர். சில நேரங்களில் மாதக்கணக்கில், ஒரு முழு சீசனுக்கும் கூட இது தொடருகிறது. இதில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்  என கூறினார்.

 2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 மற்றும் 20 என ரன்கள் எடுத்திருந்தார். மேலும் 10 இன்னிங்ஸ்களில் அவரின் சராசரி 13.40 மட்டுமே.

இருப்பினும் அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் தான் இழந்த பார்மை கோலி பெற்றார். அந்த தொடரில் அவர் 692 ரன்களை குவித்து தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார்.
2. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க ஆட்டக்காரர்கள் யார்? விராட் கோலி பதில்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
3. இன்ஸ்டாகிராமில் 10கோடி பாலோயர்கள் ; விராட் கோலி சாதனை
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
4. விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை
இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து சாத்னை படைத்தது.
5. ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு
அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.