கிரிக்கெட்

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி நாளை தேர்வு + "||" + National Tennis Ball Cricket: Tamil Nadu team selected tomorrow

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி நாளை தேர்வு

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி நாளை தேர்வு
தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிய தமிழக ஆண்கள் அணி தேர்வு நாளை நடைபெறுகிறது.
சென்னை, 

தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில் தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் அடுத்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் அணி தேர்வு நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேர்வில் விருப்பம் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க இணை செயலாளர் டி.வளர் அகிலன் தெரிவித்துள்ளார்.