கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை + "||" + Vijay Hazare Trophy: Jharkhand post 422/9 against MP, register highest score in tournament history

விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை

விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை
இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து சாத்னை படைத்தது.
இந்தூர்

19-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மார்ச் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் சூரத், இந்தூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை ஆகிய 6 நகரங்களில் நடக்கிறது.

‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது. ‘நாக்-அவுட்’ சுற்று போட்டிக்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி தொடர் அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘எலைட் ஏ’ முதல் ‘இ’ வரையிலான பிரிவில் தலா 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பிளேட்’ பிரிவில் 8 அணிகள் அங்கம் வகிக்கின்றன.

நடப்பு சாம்பியனான கர்நாடக அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவினருக்கான ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. 5 முறை சாம்பியனும், கடந்த முறை 2-வது இடத்தை பெற்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பஞ்சாப், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், விதர்பா, ஆந்திரா ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்த பிரிவினருக்கான ஆட்டம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ‘எலைட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். அத்துடன் அந்த பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் இரண்டு சிறந்த அணிகளும் கால்இறுதிக்குள் நுழையும். மேலும் 2-வது இடத்தை பிடிக்கும் 3-வது சிறந்த அணி, ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி கடைசி அணியாக கால்இறுதிக்கு முன்னேறும்.

ஷிகர் தவான், புவனேஷ்வர்குமார், குருணல் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, சுரேஷ் ரெய்னா, பிரித்வி ஷா, கருண் நாயர், சூர்யகுமார் யாதவ், கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரீசாந்த், ராபின் உத்தப்பா, ஷிவம் துபே, பியுஷ் சாவ்லா உள்பட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தினசரி ஆட்டங்கள் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் குஜராத்-சத்தீஷ்கார்,

 ரெயில்வே-பீகார், கேரளா-ஒடிசா, கர்நாடகா-உத்தரபிரதேசம், விதர்பா-ஆந்திரா, ஜார்கண்ட்-மத்தியபிரதேசம், தமிழ்நாடு-பஞ்சாப், பரோடா-கோவா, ஐதராபாத்-திரிபுரா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.

இதில்  மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்களை ஜார்கண்ட் அணி குவித்துள்ளது.காட்டடி அடித்த இசான் கிஷான் 94 பந்துகளில்173 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 19 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன் மூலம் முதல்தரக் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த 3-வது அதிகபட்ச ஸ்கோர் என்பதை இசான் கிஷன் பதிவு செய்தார்.

423 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமால இலக்குடன் களமிறங்கிய மத்தியப்பிரதேச அணி, 18.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது . 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானை விட ஐபிஎல் முக்கியமா, இதுபோன்ற விஷயங்கள் நல்லதல்ல - ஷாகித் அப்ரிடி கண்டனம்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போதே பாதியிலேயே வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்புவது வியப்பாக இருக்கிறது என தென் ஆப்பிரிக்க வாரியத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
2. கிரிக்கெட் வீரர் மொயின் அலி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட பிரபல பெண் எழுத்தாளர்
கிரிக்கெட் வீரர் மொயின் அலி குறித்து பிரபல பெண் எழுத்தாளர் சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார்.
3. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார்.
4. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: கர்நாடகா, குஜராத் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா, குஜராத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
5. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.