கிரிக்கெட்

20 ஓவர் உலகக் கோப்பை: இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுங்கள் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் + "||" + Will push for T20 World Cup's relocation in absence of visa assurance from India: Ehasn Mani

20 ஓவர் உலகக் கோப்பை: இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுங்கள் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

20 ஓவர் உலகக் கோப்பை:  இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுங்கள் - பாகிஸ்தான்  கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் பிசிசிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால், 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் வலியுறுத்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் 

இந்தியாவில் ஐசிசி 20 ஓவர்  உலகக் கோப்பை போட்டிகள்  அக்டோபர் 14-ம் தேதி முதல் நவம்பர் வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாட்டு அணிகள் பங்கேற்கின்றன, மொத்தம் 45 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஆனால், இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைப்பிரச்சினை, தீவிரவாதத் தாக்குதல் உள்ளிட்ட அரசியல்ரீதியான பிர்ச்சினைகள் இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இரு அணிகளும் சுற்றுப்பயணம் செய்து விளையாடாமல் பொதுவான இடத்தில் மட்டுமே கிரி்க்கெட் விளையாடி வருகின்றன. இந்த முறை 20 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மானி அந்நாட்டு பேட்டி அளித்துள்ளார். அப்போது  அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவோம் என்று பிசிசிஐ அமைப்பு வரும் மார்ச் மாத இறுதிக்குள் உறுதி அளிக்காவிட்டால், 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவிலிருந்து வேறுநாட்டுக்கு மாற்றுங்கள் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுங்கள் என்று ஐசிசி அமைப்பிடம் முறையிடுவோம்.

இந்தப் போட்டியைக் காண பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமல்லாமல், பத்திரிகையாளர்கள், முக்கிய விஐபிக்கள், ரசிகர்கள் என பலர் இந்தியா செல்வார்கள் ஆதலால் விசா வழங்க வேண்டும்.

ஆனால் பிசிசிஐ அமைப்பு தன்னிடம் உள்ள பணத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளின் கிரிக்கெட் அமைப்பை விலைக்கு வாங்கிவிடுகிறது. ஆனால், நாங்கள் இந்தியாவைத் தவிர்த்துவிட்டு கிரிக்கெட்டை நடத்த முயல்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக் காரணம்காட்டி ஆஸ்திரேலியா தனது பயணத்தை ரத்து செய்தது வேதனையாக இருக்கிறது. கடந்த 2020ம்ஆண்டில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது, பாகிஸ்தான் அணி அங்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது.

அந்த நேரத்தில் பாகிஸ்தான் இங்கிலாந்து செல்ல மறுத்திருந்தால் அவர்களுக்கு பெரிய  இழப்பு ஏற்பட்டிருக்கும். அதேபோல ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இந்தியா மறுத்திருந்தால், பெரும் இழப்பை அந்நாடு சந்தித்திருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
2. ஆப்கானிஸ்தான் உடனான விமான சேவை நாளை தொடக்கம்: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
3. ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி
ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் 'கடுமையான விளைவுகளை' ஏற்படுத்தும் என்று ஷா முகம்மது குரோஷி தெரிவித்தார்.
4. பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
5. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் நடவடிக்கையை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருகின்றன - ஹர்ஷ் வர்தன் சிரிங்லா
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருவதாக ஹர்ஷ் வர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.