கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை எளிதில் வீழ்த்தியது மும்பை + "||" + Vijay Hazare Cup Cricket: Mumbai easily defeated Delhi

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை எளிதில் வீழ்த்தியது மும்பை

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை எளிதில் வீழ்த்தியது மும்பை
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டம் ஒன்றில் மும்பை-டெல்லி (டி பிரிவு) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி 32 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், அனுஜ் ரவாத் இருவரும் ரன்ஏதுமின்றி ரன்-அவுட் ஆனார்கள். இதன் பிறகு ஹிமாத் சிங்கும் (106 ரன்), ஷிவாங் வஷிஷ்ட்டும் (55 ரன்) நிலைத்து நின்று போராடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி 31.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் 
வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 

பிரித்வி ஷா சதமும் (105 ரன், 89 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் அரைசதமும் (50 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரியை தோற்கடித்தது. இதில் புதுச்சேரி நிர்ணயித்த 274 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி 46.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இன்று 9 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. 

இதில் இந்தூரில் தமிழ்நாடு-ஆந்திரா அணிகள் மோதும் (காலை 9 மணி) ஆட்டமும் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி - மற்றொரு ஆட்டத்தில் ஜார்கண்ட் சாதனை
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
2. 38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் - இன்று தொடங்குகிறது
38 அணிகள் கலந்து கொள்ளும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 6 நகரங்களில் இன்று தொடங்குகிறது.
3. ஆந்திரா, கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்
ஆந்திரா, கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
4. கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்
கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
5. கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்
கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.