வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு + "||" + West Indies tour: One day, Sri Lanka squad for T20 tournament announced
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அணி வீரர்கள் அடங்கிய விவரம் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மந்திரி நமல் ராஜபக்சே ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி, கொரோனா பாதிப்புக்கு ஆளான லஹிரு குமாராவுக்கு பதிலாக சுரங்கா லக்மால் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
வருகிற மார்ச் 3ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2ந்தேதி வரை 3 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் முறையே அடுத்தடுத்து நடைபெற உள்ளன.
இந்த போட்டிகள் உயிர் பாதுகாப்பு வளைய சூழலுடன் நடைபெறுகிறது. முதல் இருபது ஓவர் போட்டி மார்ச் 3ந்தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதற்காக பிப்ரவரி 23ந்தேதி இலங்கை கிரிக்கெட் அணி புறப்பட்டு செல்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது என்றும் சீமான் அறிவித்துள்ளார்.