கிரிக்கெட்

இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஸ் பந்துவீச்சு ஆலோசகர் பணியில் இருந்து திடீர் விலகல் + "||" + Former Sri Lankan fast bowler Vaas resigns as bowling advisor

இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஸ் பந்துவீச்சு ஆலோசகர் பணியில் இருந்து திடீர் விலகல்

இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஸ் பந்துவீச்சு ஆலோசகர் பணியில் இருந்து திடீர் விலகல்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் பந்துவீச்சு ஆலோசகர் பணியில் இருந்து விலகியுள்ளார்.
கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ்.  பந்துவீச்சு ஆலோசகர் பணியில் ஈடுபட்டு வந்த வாஸ் அந்த பணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.  இதற்கான அணி வீரர்கள் அடங்கிய விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசுக்கு புறப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்பு வாஸ் பதவி விலகல் முடிவை எடுத்துள்ளார்.  அவர் கடந்த வாரம் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும், கூடுதல் சம்பளம் கேட்டு வாஸ் நிர்பந்தித்து வந்த சூழலில் அதற்கு அணி நிர்வாகம் உடன்படவில்லை.  இதனை முன்னிட்டு பதவி விலகலை வாஸ் அறிவித்துள்ளார்.

இலங்கை அணிக்காக விளையாடிய வாஸ் 111 டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.  322 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னணி நாடுகள் விலகல் எதிரொலி: தாமஸ்-உபேர் பேட்மிண்டன் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு
முன்னணி நாடுகள் விலகல் எதிரொலியாக தாமஸ்-உபேர் பேட்மிண்டன் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.