கிரிக்கெட்

இலங்கை வீரர் தரங்கா ஓய்வு + "||" + Sri Lankan player Tharanga retires

இலங்கை வீரர் தரங்கா ஓய்வு

இலங்கை வீரர் தரங்கா ஓய்வு
இலங்கை வீரர் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ‘டுவிட்டர்’ மூலம் அறிவித்தார்.
கொழும்பு, 

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான 36 வயதான உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ‘டுவிட்டர்’ மூலம் நேற்று அறிவித்தார். 15 வருடங்களாக சர்வதேச போட்டியில் விளையாடியுள்ள தரங்கா இலங்கை அணிக்காக 31 டெஸ்டில் ஆடி 3 சதம் உள்பட 1,754 ரன்னும், 235 ஒருநாள் போட்டியில் விளையாடி 15 சதம் உள்பட 6,951 ரன்னும், 26 இருபது ஓவர் போட்டியில் ஆடி 407 ரன்னும் எடுத்துள்ளார்.