விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சதத்தால் மும்பை அணி வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்,
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் மும்பை-மராட்டியம் அணிகள் மோதின. முதலில் ‘பேட்’ செய்த மராட்டிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 47.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 280 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 99 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 103 ரன்கள் விளாசினார். மும்பை அணி தொடர்ச்சியாக ருசித்த 2-வது வெற்றி இதுவாகும்.