கிரிக்கெட்

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99/3 + "||" + Rohit fifty cements India's dominance

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99/3

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99/3
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
அகமதபாத்,

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று துவங்கியது.  பகல் இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தை பயன்படுத்தி விளையாடப்படும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்தியா பந்து வீசியது. 

இந்திய அணியில் அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இவர்களில் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்த்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 48.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 112- ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங்கை துவக்கியது. துவக்க வீரர் சுப்மன் கில் (11 ரன்கள்) ஏமாற்றம் அளித்தாலும் மறுமுனையில் ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  புஜாரா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த விராட் கோலி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும், ரகானே ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது; 2,104 பேர் உயிரிழப்பால் மக்கள் சோகம்
இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய உச்சம் என பதிவாகி உள்ளது. 2,104 பேர் இந்த வைரசால் உயிரிழந்திருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
2. இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளிலும் ஒரே விதமான பாதிப்புகள் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. இந்தியா-இங்கிலாந்து இடையே வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விமான சேவை நிறுத்தம் - ஏர் இந்தியா அறிவிப்பு
வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை இங்கிலாந்துக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒருநாள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு: சிங்கப்பூர் அறிவிப்பு
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.