3-வது டெஸ்ட்: கவனக்குறைவாக பந்து மீது எச்சில் தேய்த்த பென்ஸ்டோக்ஸ்!

3-வது டெஸ்ட்:  கவனக்குறைவாக பந்து மீது எச்சில் தேய்த்த பென்ஸ்டோக்ஸ்!
x
தினத்தந்தி 24 Feb 2021 5:28 PM GMT (Updated: 24 Feb 2021 5:28 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் பந்தை எச்சிலால் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அவ்வாறு செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு.

அகமதபாத்,

டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் பந்தை எச்சிலால் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அவ்வாறு செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு. 

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பந்தை எச்சிலால் தேய்ப்பதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.   பந்து களத்தில் உள்ள எல்லா வீரர்களின் கைக்கும் செல்லும். பந்து மீது எச்சில் படும் போது அதன் மூலம் மற்ற வீரர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி.யின் மருத்துவ கமிட்டி எச்சரித்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது,  12- வது ஓவரை வீச வந்த  பென்ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தை எச்சில் கொண்டு தேய்த்துவிட்டார். 

பென்ஸ்டோக்ஸ் எச்சில் கொண்டு தேய்த்துவிட்டதால், உடனடியாக பந்தை கள நடுவர்கள் சுத்தம் செய்தனர். அதன்பிறகே பந்து வீச அனுமதிக்கப்பட்டது. இதுபோன்ற 2- முறைக்கும் மேலாக தவறு நடக்கும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் என்று ஐசிசி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story