கிரிக்கெட்

டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி + "||" + Broke Tony’s record, goalie

டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி

டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி
இந்திய அணி உள்நாட்டில் பெற்ற 22-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று டோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
*விராட் கோலி தலைமையில் இந்திய அணி உள்நாட்டில் பெற்ற 22-வது டெஸ்ட் (29 டெஸ்டில்) வெற்றி இதுவாகும். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையை டோனியிடம் (30 டெஸ்டில் 21 வெற்றி) இருந்து கோலி தட்டிப்பறித்தார்.

* டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 9-வது நிகழ்வாகும். இங்கிலாந்துக்கு எதிராக ஏற்கனவே ஒரு முறை விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றிருக்கிறது.

* இந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் மொத்தம் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வேட்டையாடிய பகல்-இரவு டெஸ்ட்டாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2017-18-ம் ஆண்டு துபாயில் நடந்த இலங்கை-பாகிஸ்தான் பகல்-இரவு டெஸ்டில் 24 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

* 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சின் விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீழ்த்தினார். அவரது சுழலில் ஸ்டோக்ஸ் சிக்குவது 11-வது முறையாகும். அஸ்வின் பந்து வீச்சில் அதிக முறை ஆட்டமிழந்த வீரராக ஸ்டோக்ஸ் இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து ஆடுகளத்தில் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம் - கோலிக்கு, கபில்தேவ் அறிவுரை
இங்கிலாந்து மண்ணில் அதிக ஆக்ரோஷமாக செயல்படக் கூடாது என இந்திய கேப்டன் கோலிக்கு, கபில்தேவ் அறிவுரை கூறியுள்ளார்.
2. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலியை முந்தினார் ஸ்டீவன் சுமித்
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினார்.