கிரிக்கெட்

2 நாளில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் எத்தனை? + "||" + How many Test matches ended in 2 days?

2 நாளில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் எத்தனை?

2 நாளில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் எத்தனை?
2 நாளில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் எத்தனை? என்பதை பார்க்கலாம்.
ஆமதாபாத், 

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஆச்சரியப்படும் வகையில் இரண்டு நாளுக்குள் முடிவுக்கு வந்தது. ஆடுகளம் முழுமையாக சுழலுக்கு உகந்த வகையில் மாற்றப்பட்டு விட்டது, இது டெஸ்ட்டுக்கு ஏற்ற தரமான சரியான ஆடுகளம் அல்ல என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

ஆனால் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவது இது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே 21 டெஸ்ட் போட்டிகள் இது போல் இரண்டு நாளிலேயே முடிவை பெற்றுள்ளன. இந்திய மண்ணில் இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி 2-வது நாளில் இந்தியாவின் வெற்றியோடு முடிவு கண்டது.

ஆமதாபாத் பகல்-இரவு டெஸ்டில் மொத்தம் 842 பந்துகள் வீசப்பட்டன. 1935-ம் ஆண்டுக்கு பிறகு குறைந்த பந்துகள் வீசப்பட்டு முடிவு காணப்பட்ட போட்டியாக இது அமைந்திருக்கிறது.