கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு + "||" + Indian cricketer Yusuf Pathan retires from all levels of cricket

இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு
இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக செயல்பட்டவர் யூசுப் பதான்.  கடந்த 2007ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர், இந்தியாவுக்காக 57 ஒரு நாள் மற்றும் 22 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி முறையே 810 மற்றும் 236 ரன்களை சேகரித்து உள்ளார்.

ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2007 மற்றும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை 2011 ஆகிய இரு உலக கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற பெருமையை கொண்டவர்.

இந்நிலையில், டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் என கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், என்னுடைய வாழ்க்கையில் கிரிக்கெட்டில் முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் இன்று வந்து விட்டது.  கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து நிலைகளில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுகிறேன்.

என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், அணி, பயிற்சியாளர்கள் மற்றும் நாடு முழுமைக்கும் எனக்கு ஆதரவு மற்றும் அன்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  வருங்காலத்திலும் எனக்கு நீங்கள் ஊக்கம் அளிப்பீர்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என அறிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு
ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு முதல் மந்திரி தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
2. ஓய்வு பெற்றவுடன் அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன வேலையில் சேரக்கூடாது - ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு
அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்றவுடனே தனியார்துறை வேலையில் சேரக்கூடாது. குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா அறிவிப்பு
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிட்டார்.
4. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் வெளியிட்டு உள்ளார்.
5. உத்தரகாண்ட் வெள்ளம்; பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு, 125 பேர் மாயம்: முதல் மந்திரி அறிவிப்பு
உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.