கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு + "||" + India vs England: Jasprit Bumrah released from Indian Test squad due to personal reasons

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
ஆமதாபாத்,

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. அடுத்து நடைபெற உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அல்லது டிரா செய்வதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் சென்னை, ஆமதாபாத் மைதானங்கள் அனைத்தும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. 

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தன்னை விடுவிக்குமாறு பும்ரா கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

4-வது டெஸ்டில் இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவச கொரோனா பரிசோதனைகள்
இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகி உள்ளார்.
3. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
4. இங்கிலாந்து அணிக்கு 318 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317-ரன்கள் குவித்துள்ளது.
5. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க ஆட்டக்காரர்கள் யார்? விராட் கோலி பதில்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.