இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை + "||" + India vs England: ODI Series To Be Played Behind Closed Doors In Pune Due To Spike In COVID Cases
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் ஆட்டங்கள் வெறிச்சோடிய மைதானத்தில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.
புனே,
டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் ஆமதாபாத்திலும், 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மராட்டிய மாநிலம் புனேயிலும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே மார்ச் 23, 26, 28-ந்தேதிகளில் நடக்கிறது. மராட்டியத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒரு நாள் போட்டி அங்கு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் ஒரு நாள் போட்டிகள் திட்டமிட்டபடி புனேயில் நடைபெறும் என்று மராட்டிய மாநில கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. ஆனால் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்ரேவின் அறிவுறுத்தலின்படி ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மராட்டிய கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் ஆட்டங்கள் வெறிச்சோடிய மைதானத்தில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.