தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு - ஷிகா பாண்டே நீக்கம்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு - ஷிகா பாண்டே நீக்கம்
x
தினத்தந்தி 27 Feb 2021 11:44 PM GMT (Updated: 28 Feb 2021 12:59 AM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடருக்கான இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூத்த வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஷிகா பாண்டே அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடர் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெறுகிறது. 

முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 7-ந் தேதி நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடருக்கான இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூத்த வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஷிகா பாண்டே அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவுக்கு ஒருநாள் போட்டி அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒருநாள் அணியில் யாஸ்திகா பாட்டியா, விக்கெட் கீப்பர் ஸ்வேதா வர்மா, பிரத்யுஷா, மோனிகா பட்டேல் ஆகியோர் புதுமுக வீராங்கனைகளாக இடம் பிடித்துள்ளனர். ஒருநாள் அணியின் கேப்டனாக மிதாலி ராஜூம், 20 ஓவர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும் நீடிக்கிறார்கள்.

Next Story