கிரிக்கெட்

‘கும்பிளேவின் சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை’- அஸ்வின் + "||" + ‘Don’t think about breaking Kumble’s record’ - Aswin

‘கும்பிளேவின் சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை’- அஸ்வின்

‘கும்பிளேவின் சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை’- அஸ்வின்
முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.
ஆமதாபாத், பிப்.28-

இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சில தினங்களுக்கு முன்பு டெஸ்டில் 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய 4-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவர் 77 டெஸ்டுகளில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இ்ந்திய அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே (619 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார். 

வருகிற ஆண்டுகளில் கும்பிளேவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதா? என்று அஸ்வினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘கும்பிளேவின் சாதனையை எட்ட வேண்டும் என்றால் இன்னும் 218 விக்கெட் தேவை. 

என்னை பொறுத்தவரை இது போன்ற சாதனைகள் பற்றி சிந்திப்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நிறுத்தி விட்டேன். ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் என்னால் என்ன செய்ய முடியும், எப்படி ஆட்டத்திறனை மேம்படுத்துவது, அணிக்கு அதிக அளவில் எப்படி பங்களிப்பு அளிப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். தனிப்பட்ட முறையிலும், கிரிக்கெட் வீரராகவும் மேலும் சிறந்த முறையில் செயல்படுவதை எதிர்நோக்குகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக இதைத் தான் நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதையே தொடர விரும்புகிறேன்’ என்றார்.