கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல் + "||" + 20 over cricket against Sri Lanka: Gayle back in the West Indies squad

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் மூத்த அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இடம்பெற்றுள்ளார்.
கிங்ஸ்டன், 

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி ஆன்டிகுவாவில் நடக்கிறது. 

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக பொல்லார்ட் நீடிக்கிறார். மூத்த அதிரடி பேட்ஸ்மேன் 41 வயதான கிறிஸ் கெய்ல் 2 ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். இந்த ஆண்டு கடைசியில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கிறது. 

இதை மனதில் கொண்டு கெய்ல் அழைக்கப்பட்டுள்ளார். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் பிடெல் எட்வர்ட்ஸ் அணிக்கு தேர்வாகியிருக்கிறார். கடைசியாக 2012-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடிய 39 வயதான எட்வர்ட்ஸ் 9 ஆண்டுக்கு பிறகு வாய்ப்பு பெற்றுள்ளார். 

இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.