கிரிக்கெட்

டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் - பிசிசிஐ அதிகாரி தகவல் + "||" + The pitch will be set in favor of batting in the India-England Test match - BCCI official information

டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் - பிசிசிஐ அதிகாரி தகவல்

டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் - பிசிசிஐ அதிகாரி தகவல்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


அகமதாபாத்,

அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் ஒன்றரை நாளில் போட்டி முடிவடைந்ததாக பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  மொட்டேரா மைதானத்தில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் பிட்ச் அமைக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.