கிரிக்கெட்

இன்ஸ்டாகிரமில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்; விராட் கோலிக்கு புதிய பெருமை + "||" + Virat Kohli smashes special century, becomes 1st Indian celebrity to reach 100 million followers on Instagram

இன்ஸ்டாகிரமில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்; விராட் கோலிக்கு புதிய பெருமை

இன்ஸ்டாகிரமில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்; விராட் கோலிக்கு புதிய பெருமை
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிரமில் 100 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விளையாட்டு பிரபலங்களில் ஒருவர் ஆவார். 

இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 100 மில்லியனை ( 10 கோடி) கடந்துள்ளது. இந்தியாவில் 100 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற ஒரே பிரபலம் விராட் கோலியே ஆவார்.  அதேபோல், உலக அளவில் 100 மில்லியன் பாலோயர்களை எட்டிய ஒரே கிரிக்கெட் பிரபலமும் விராட் கோலிதான்.

இந்தியாவில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக பாலோயர்களை கொண்ட பிரபலமாக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் முறையே ரன்வீர் சிங், தீபிகாபடுகோன் ஆகியோர் உள்ளனர். இந்திய பிரதமர் மோடியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 51.2 மில்லியனாக உள்ளது. 
 
உலக அளவில் இன்ஸ்டாகிரமில் அதிக பாலோயர்களை கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் கால்பந்து நட்சத்திரம் ரோனால்டோ  (500 மில்லியன்)  உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் முறையே லியோனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் உள்ளனர். இந்த வரிசையில் விராட்  கோலி 4-ஆம் இடம் வகிக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுழல் ஆடுகளத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்? விராட் கோலி கேள்வி
ஆமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி 2-வது நாளிலேயே முடிந்ததால் வெகுவாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சுழலின் கூடாரமாக இந்த ஆடுகளம் (பிட்ச்) இருந்தது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், சில ஊடகத்தினரும் குறை கூறினார்கள்.
2. சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்: விராட் கோலி
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள், கிரிக்கெட் மீதான அவர்களின் புரிதல் அபாரமானது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
3. அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்போம்- விராட் கோலி
சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
4. “விராட் கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை” - மொயீன் அலி
இந்தியாவுடன் நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் விராட் கோலியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்க கோரும் வழக்கில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது