கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக டிரெஸ்கோதிக் நியமனம் + "||" + Trescotic appointed coach of the England cricket team

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக டிரெஸ்கோதிக் நியமனம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக டிரெஸ்கோதிக் நியமனம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் டிரெஸ்கோதிக் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
லண்டன், 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் டிரெஸ்கோதிக் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அந்த பொறுப்பில் சமீபத்தில் நியமிக்கப்பட்டு இருந்த முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் நீக்கப்பட்டுள்ளார். டிரெஸ்கோதிக் மார்ச் மாதம் மத்தியில் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜான் லீவிசும், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜீதன் பட்டேலும் நிரந்தர பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜீதன் பட்டேல் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரகாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.