கிரிக்கெட்

இன்ஸ்டாகிராமில் 10கோடி பாலோயர்கள் ; விராட் கோலி சாதனை + "||" + Virat Kohli - the first cricket star to hit 100 million followers on Instagram

இன்ஸ்டாகிராமில் 10கோடி பாலோயர்கள் ; விராட் கோலி சாதனை

இன்ஸ்டாகிராமில் 10கோடி பாலோயர்கள் ; விராட் கோலி சாதனை
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
புதுடெல்லி

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த  முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடருபவர்களில்  நான்காவது விளையாட்டு வீரர் கோலி  ஆவார்.இன்ஸ்டாகிராமில் 7.5 கோடி பின்தொடர்பவர்களை பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

இன்ஸ்டாகிராம் தவிர, டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் கோலியை அதிக  ரசிகர்களைப் பின்தொடர்கிறார்கள்.தற்போது வரை அவருக்கு டுவிட்டரில் 4.08 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர், அதே நேரத்தில் பேஸ்புக்கில் 3.6 கோடிக்கும் அதிகமான லைக்குகள் உள்ளன.

இதனையொட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை 6 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 26.6 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட விளையாட்டு வீரராக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ முதல் இடத்தில் இருக்கிறார்.பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி மற்றும் பிரேசிலின் நெய்மர் முறையே 18.6 கோடி, 14.7  கோடி பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

10 கோடி பாலோயர்களை கிளப்பில் ஜுவென்டஸ் ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், லியோனல் மெஸ்ஸி, ஹாலிவுட் நடிகரும் முன்னாள் மல்யுத்த வீரருமான டுவைன் (தி ராக்) ஜான்சன், அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் பியோனஸ் மற்றும் அரினா கிராண்டே ஆகியோரும் உள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க ஆட்டக்காரர்கள் யார்? விராட் கோலி பதில்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
2. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
3. சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன விராட் கோலி: வீடியோ வைரல்
சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன இந்திய கேப்டன் விராட் கோலியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
4. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மான் கில், விராட் கோலி டக் அவுட்
இந்திய அணி உணவு இடைவேளை வரை 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
5. மகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா
நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படம் மற்றும் பெயரை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.