இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
x
தினத்தந்தி 3 March 2021 12:54 AM GMT (Updated: 3 March 2021 12:54 AM GMT)

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொண்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆமதாபாத், 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொண்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 58 வயது ரவிசாஸ்திரி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். தடுப்பூசி எடுத்துக்கொண்ட படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரவிசாஸ்திரி பதிவிட்ட கருத்தில், ‘கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவை வலிமையானதாக மாற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த வீரரான 69 வயது மதன்லால் டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். 

Next Story