கிரிக்கெட்

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி + "||" + 3 contestants including Aswin for Best Player of the Month for February

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கைல் மேயர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரை இறுதி செய்து ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. பிப்ரவரி மாதத்தில் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதுடன், சதம் உள்பட 176 ரன்களும் எடுத்து பிரமாதப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடந்த மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்டில் ஆடி இரட்டை சதம் உள்பட 333 ரன்கள் சேர்த்துள்ளார். அத்துடன் 6 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் கைல் மேயர்ஸ் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகி 2-வது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இவர்களில் இருந்து சிறந்த வீரரை ஐ.சி.சி.யின் வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் இணையம் வழியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் டாமி பீமோன்ட், நாட் ஸ்சிவர் (இங்கிலாந்து), புரூக் ஹாலிடே (நியூசிலாந்து) ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்
கொரோனா பாதிப்பால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் புதிய சாதனையை நோக்கி நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது.
3. புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிைச வெளியீடு: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் புதிய தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
4. பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் ஷபாலி வர்மா, ராதா யாதவ் பங்கேற்கிறார்கள்
பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் ஷபாலி வர்மா, ராதா யாதவ் பங்கேற்கிறார்கள்.
5. சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்
சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்.