கிரிக்கெட்

6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு + "||" + Pakistan Super League cricket match postponed

6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு

6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு
6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

இந்த போட்டியில் பங்கேற்ற 2 வெளிநாட்டு வீரர்கள் முதலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களில் மேலும் 4 வீரர்கள், ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. கொரோனா பரவல் எதிரொலியாக சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப திட்டமிட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த போட்டியை உடனடியாக தள்ளிவைப்பதாக நேற்று அறிவித்தது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விஷயத்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் குறைந்த பட்ச எண்ணிக்கை பதிவு
பாகிஸ்தானில் கொரோனா தொற்று விகிதம் 1.9 சதவிகிதமாக சரிந்துள்ளது
2. கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு
கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
3. விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க சிறப்பு பணிக்குழு அமைப்பு - தமிழக அரசு உத்தரவு
விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்கவும், குறைக்கவும் சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. ஓமனில் புதிதாக 2,015 பேருக்கு கொரோனா; 35 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.