கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா அணி 80/4 + "||" + India trail by 125 runs

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா அணி 80/4

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா அணி  80/4
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
அகமதாபாத்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 

இந்தப் போட்டியில்‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  24 ரன்கள் எடுத்து இருந்தது. 

2- ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புஜாரா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, விராட் கோலி டக் அவுட் ஆனார். ரகானேவும் 27 ரன்களில் ஏமாற்றினார். இந்திய அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களுடன் விளையாடி வருகிறது.   இங்கிலாந்து அணியை விட இன்னும் 125-ரன்கள் இந்தியா பின் தங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பாலாறு போன்று காட்சியளிக்கும் ஆறு!
இங்கிலாந்தில் பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் பால் அனைத்தும் ஆற்றில் கலந்தது.
2. இங்கிலாந்து: மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
3. இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்; புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரப்பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர். அதே நேரத்தில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பாதித்துள்ளது.
4. கொரோனா கால இழப்பை ஈடுகட்ட ‘இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும்’ - சர்வதேச நிதியம் சொல்கிறது
கொரோனா கால இழப்பை ஈடுகட்ட இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
5. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.