கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 365 ரன்களில் இந்தியா ஆல் அவுட் + "||" + Washington left stranded on 96 as India take 160-run lead

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 365 ரன்களில் இந்தியா ஆல் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்:  முதல் இன்னிங்சில் 365 ரன்களில் இந்தியா ஆல் அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 96-ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அகமதாபாத்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (8 ரன்), புஜாரா (15 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினர். புஜாரா (17 ரன்கள்), விராட் கோலி (0) ரகானே (27 ரன்கள்) என முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினாலும் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த ரிஷப் பண்டிற்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட் சதம் விளாசி 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.  நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி    முதல் இன்னிங்சில் 94 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் சேர்த்து மொத்தம் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. 

3 ஆம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியதும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். ஓரளவு பொறுப்பாக ஆடிய அக்சர் படேல் (43 ரன்கள்) துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் வாஷிங்டன் சுந்தர் சதத்தை நெருங்கி கொண்டிருந்ததால், அவர் சதம் அடிப்பாரா? என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அடுத்து வந்த இஷாந்த் சர்மா மற்றும் முகம்மது சிராஜ் ரன் எதுவும் இன்றி வந்த வேகத்தில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 96-ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்திய அணி114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 160-ரன்கள் முன்னிலை பெற்றது.  பந்து வீச்சில் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதையடுத்து, இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளிலும் ஒரே விதமான பாதிப்புகள் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. இந்தியா-இங்கிலாந்து இடையே வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விமான சேவை நிறுத்தம் - ஏர் இந்தியா அறிவிப்பு
வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை இங்கிலாந்துக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒருநாள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு: சிங்கப்பூர் அறிவிப்பு
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
5. இந்தியாவில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,761 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.