ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து


ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து
x
தினத்தந்தி 7 March 2021 11:16 PM GMT (Updated: 7 March 2021 11:16 PM GMT)

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 74 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. மிடில் வரிசை சீர்குலைவால் ரன்வேகம் வெகுவாக தளர்ந்து போனது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 44 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 36 ரன்களும் எடுத்தனர். கிளைன் மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் வீழ்ந்தார். சுழற்பந்து வீச்சாளர் சோதி 3 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய ஆடிய நியூசிலாந்து அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. மார்ட்டின் கப்தில் 71 ரன்கள் (46 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்தும், 3, 4-வது ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன.


Next Story