கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல் + "||" + IPL Release of cricket match schedule

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற போட்டிகளில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒன்று. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் கோடிக்கணக்கில் பணமழை கொட்டுகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததாலும், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக மகுடம் சூடியது.

6 நகரங்களில் நடக்கிறது

இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்துவதில் தீவிரம் காட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம் போட்டி அட்டவணை குறித்து அணிகளின் நிர்வாகிகள், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், அரசு சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோரிடம் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டனர். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராதால் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை அமைத்து போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் 14-வது ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார். இதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டும் இந்த முறை ஐ.பி.எல். போட்டி நடைபெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் மராட்டிய அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக போட்டிக்குரிய இடங்களில் மும்பையும் சேர்க்கப்பட்டு உள்ளது.

தொடக்க ஆட்டத்தில் யார்?

8 அணிகள் இடையிலான ஐ.பி.எல். திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 30-ந்தேதி அரங்கேறுகிறது. ஒவ்வொரு ஆட்டமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அதுவே ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் இருந்தால், முதலாவது ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மொத்தம் 11 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த முறை ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதுபோல வீரர்கள் மற்றும் போட்டியில் தொடர்புடைய அனைவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்த போட்டியை உள்ளூரில் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நம்புவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்தில் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல். ஆரம்பகட்ட போட்டிகளில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், பூட்டிய மைதானத்தில் போட்டி நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. போக போக நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதை பொறுத்து ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த அணிக்கும் உள்ளூரில் ஆட்டம் கிடையாது

இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் எந்த அணிக்கும் உள்ளூரில் போட்டிகள் எதுவும் கிடையாது. சென்னை சேப்பாக்கத்தில் மொத்தம் 10 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் சென்னை சூப்பர் கிங்சுக்கு இங்கு ஒரு ஆட்டமும் கிடையாது. மும்பையில் 10 ஆட்டங்கள் நடந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குரிய ஆட்டங்கள் அங்கும் ஒன்றும் இல்லை. பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கும் இதே நிலைமை தான். அதாவது எந்த அணிக்கும் உள்ளூரின் சாதகமான அம்சத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை.

ஐதராபாத், மொகாலி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இந்த முறை ஐ.பி.எல். போட்டி நடைபெறவில்லை. இதனால் அந்த நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இவர்களை சரிகட்டுவதற்காக யாருக்கும் உள்ளூர் ஆட்டங்கள் இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஐ.பி.எல்.போட்டியை நடத்த வேண்டி இருப்பதால் அதிகமான போக்குவரத்தை தவிப்பதற்காகத் தான் போட்டிக்கான இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. முன்பு லீக் சுற்று முடிவதற்குள் ஒவ்வொரு அணியும் 10-12 தடவை விமானத்தில் அடுத்த நகரங்களுக்கு சென்று கொண்டிருக்கும். ஆனால் இந்த தடவை லீக் சுற்றின் போது மொத்தம் 3 தடவை மட்டுமே ஒவ்வொரு அணிகளும் பயணம் மேற்கொள்ளும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அணிகளும் மொத்தமுள்ள 6 நகரங்களில் 4-ல் தங்களது லீக் சுற்றில் விளையாடும்.

டோனி ரசிகர்கள் ஏமாற்றம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான 39 வயதான டோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குரிய ஆட்டங்கள் சென்னையில் இல்லை என்பதால் டோனியின் அதிரடியை சென்னையில் கண்டுகளிக்க வாய்ப்பில்லை. இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் நடந்ததால் தொடர்ந்து 2-வது முறையாக சென்னையில் டோனியின் தரிசனத்தை பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.


ஐ.பி.எல். போட்டி அட்டவணை

தேதி - மோதல் இடம் -  நேரம்

ஏப்.9 மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.10 சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.11 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.12 ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.13 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- மும்பை இ்ந்தியன்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.14 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை

ஏப்.15 ராஜஸ்தான் ராய்லஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.16 பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.17 மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.18 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மாலை 3.30 மணி

ஏப்.18 டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.19 சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.20 டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.21 பஞ்சாப் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் சென்னை மாலை 3.30 மணி

ஏப்.21 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.22 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.23 பஞ்சாப் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.24 ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இரவு 7.30 மணி

ஏப்.25 சென்னை சூப்பா கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை மாலை 3.30 மணி

ஏப்.25 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் சென்னை இரவு 7.30 மணி

ஏப்.26 பஞ்சாப் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

ஏப்.27 டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

ஏப்.28 சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

ஏப்.29 மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி மாலை 3.30 மணி

ஏப்.29 டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

ஏப்.30 பஞ்சாப் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.1 மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.2 ராஜஸ்தான் ராயல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.2 பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.3 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.4 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.5 ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.6 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.7 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.8 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆமதாபாத் மாலை 3.30 மணி

மே.8 ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் டெல்லி இரவு 7.30 மணி

மே.9 சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு மாலை 3.30 மணி

மே.9 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.10 மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.11 டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே. 12 சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.13 மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு மாலை 3.30 மணி

மே.13 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா இரவு7.30 மணி

மே.14 பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.15 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.16 ராஜஸ்தான் ராயல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா மாலை 3.30 மணி

மே.16 சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.17 டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.18 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு பெங்களூரு இரவு 7.30 மணி

மே.19 ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.20 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.21 கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் பெங்களூரு மாலை 3.30 மணி

மே.21 டெல்லி கேப்பிட்டல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.22 பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மே.23 மும்பை இ்ந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா மாலை 3.30 மணி

மே.23 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா இரவு 7.30 மணி

மே.2 இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.26 வெளியேற்றுதல் சுற்று ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே.28 இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆமதாபாத் இரவு 7.30 மணி

மே. 30 இறுதிப்போட்டி ஆமதாபாத் இரவு 7.30 மணி


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டமில்லை: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டம் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2. ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது.
3. ஐ.பி.எல். பற்றிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார், ஸ்டெயின்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஏலத்துக்கு முன்னதாகவே விலகினார்.