கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர்: தேவ்தத் படிக்கல் அடுத்தடுத்து 4 சதம் விளாசி அசத்தல் + "||" + Vijay Hazare Trophy: Devdutt Padikkal Scores Fourth Consecutive Century

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர்: தேவ்தத் படிக்கல் அடுத்தடுத்து 4 சதம் விளாசி அசத்தல்

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர்: தேவ்தத் படிக்கல் அடுத்தடுத்து 4 சதம் விளாசி அசத்தல்
அபார பார்மில் உள்ள தேவ்தத் படிக்கல், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார்.
டெல்லி,

விஜய்ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் டெல்லியும் கர்நாடக அணிகளும் மோதின.  இப்போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடக அணியில்  துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார். 102 ரன்கள் குவித்து படிக்கல் ஆட்டமிழந்தார். 

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து 4 சதங்கள் விளாசி வியக்க வைத்துள்ளார். ஏற்கனவே, ஒடிசா (152 ரன்கள்), கேரளா (126*) ரயில்வேஸ் (145*) அணிகளுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்.  

விஜய் ஹசாரே டிராபியில்  6 போட்டிகள் விளையாடியுள்ள தேவ்தத் படிக்கல் 673 ரன்கள் எடுத்துள்ளார். அபார பார்மில் உள்ள தேவ்தத் படிக்கல், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். பெங்களூரு அணி முதல் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா- இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?
இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
2. பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மிதாலிராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’
பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மிதாலிராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’.
3. பொல்லார்டு அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.
4. இந்தியா 170- ரன்களுக்கு ஆல் அவுட்- நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 139-ரன்கள்
இன்னும் 55 ஓவர்கள் வீசப்பட வேண்டியுள்ளதால், இந்திய அணி டிரா செய்ய கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது.
5. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று போட்டியை டிரா செய்யும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது