கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்: பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தீவிரம் காட்டும் ஹர்திக் பாண்ட்யா + "||" + IND vs ENG: Hardik Pandya bowls at nets with tweaked action

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்: பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தீவிரம் காட்டும் ஹர்திக் பாண்ட்யா

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்: பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தீவிரம் காட்டும் ஹர்திக் பாண்ட்யா
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியின் போது பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஹர்திக் பாண்ட்யா தீவிரம் காட்டினார்.
ஆமதாபாத், 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் (மார்ச் 12, 14, 16, 18, 20) கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் நாளை மறுதினம் (வெள்ளிக் கிழமை) ஆமதாபாத்தில் நடக்கிறது. 

இதையொட்டி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நேற்று பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சு பயிற்சியிலும் தீவிரம் காட்டினார். 

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள், டி20 தொடரில் விளையாடினார். அதன்பின் நாடு திரும்பினார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வான இவருக்கு, லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 20 ஒவர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, தனது பயிற்சி குறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், கேப்டன் கோஹ்லி உள்ளிட்ட சகவீரர்கள் முன்னிலையில் பேட்டிங் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்ட்யா, பவுலிங் பயிற்சியும் மேற்கொண்ட வீடியோ இடம் பெற்றுள்ளது. 

இதனிடையே தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் இருப்பதால் முதலாவது ஆட்டத்தில் ஷிகர் தவானுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் நேற்று வரை 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் நேற்று வரை கொரோனா தடுப்பூசியின் 17 கோடி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை சற்று குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
4. இங்கிலாந்துக்கு ஏற்றுமதிக்காக தயாரான 50 லட்சம் தடுப்பூசிகளை உள்நாட்டில் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரே நாளில் நேற்று 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.