கிரிக்கெட்

டி.வி. தொகுப்பாளரை மணக்கிறார் பும்ரா? + "||" + TV Editor Bumra is getting married

டி.வி. தொகுப்பாளரை மணக்கிறார் பும்ரா?

டி.வி. தொகுப்பாளரை மணக்கிறார் பும்ரா?
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறவில்லை.
மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் 27 வயதான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து விலகினார். அடுத்து நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறவில்லை. தனிப்பட்ட காரணத்துக்காக தன்னை அணியில் இருந்து விடுவிக்கும்படி கூறியதன் அடிப்படையில் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்வதற்காகவே 20 ஓவர் தொடரில் இருந்து ஒதுங்கியது தெரியவந்திருக்கிறது. தமிழில் கொடி படத்தில் நடித்த நடிகை அனுபமாவை அவர் திருமணம் செய்யப்போவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலை அனுபமாவின் தாயார் மறுத்தார்.

தற்போது முன்னாள் மாடல் அழகியும், பிரபல விளையாட்டு டி.வி. சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனை பும்ரா கரம்பிடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவர்களது திருமணம் மற்றும் சம்பிரதாயங்கள் கோவாவில் வருகிற 14-15-ந்தேதிகளில் நடக்க இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை பும்ரா அல்லது சஞ்சனா தரப்பில் இருந்து இதுவரை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.