கிரிக்கெட்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கிடையே இன்று 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி + "||" + India women vs South Africa women: Confident hosts look to carry momentum into 3rd ODI

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கிடையே இன்று 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கிடையே இன்று 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கிடையே இன்று 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
லக்னோ, 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. 

இதில் முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 157 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. அந்த நம்பிக்கையுடன் இந்திய அணி களம் காணும். 

அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வர தென்ஆப்பிரிக்க அணி கடுமையாக முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பெண்கள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், புனம் ரவுத், பிரியா புனியா, யஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர், டி ஹேமலதா, தீப்தி சர்மா, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஸ்வேதா வர்மா, ராத்வ் யாதவ் ஜுலான் கோஸ்வாமி, மான்சி ஜோஷி, பூனம் யாதவ், சி பிரதியுஷா, மோனிகா படேல்.

தென்னாப்பிரிக்கா பெண்கள் அணி: சுனே லூஸ் (கேப்டன்), அயபோங்கா காக்கா, ஷப்னிம் இஸ்மாயில், லாரா வால்வார்ட், த்ரிஷா செட்டி, சினலோ ஜாஃப்டா, டாஸ்மின் பிரிட்ஸ், மரிசேன் காப், நொண்டுமிசோ ஷாங்கேஸ், லிசெல் லீ, அன்னெக் போஷ், ஃபாயே துனிகுலிகோன் நாடின் டி கிளார்க், லாரா குடால், துமி சேகுஹுனே.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் நேற்றைவிட சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் இதுவரை 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல்
இந்தியாவில் இதுவரை 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.
3. இந்தியாவில் புதிதாக 38,079 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 560 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் மது பழக்கத்தால் 62 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: லான்செட் பத்திரிகை
இந்தியாவில் மது குடித்ததால் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.
5. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.