கிரிக்கெட்

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்: பும்ராவை முந்தினார் சஹால் + "||" + India vs England, 1st T20I: Yuzvendra Chahal Goes Past Jasprit Bumrah To Become India's Leading Wicket-Taker In T20Is

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்: பும்ராவை முந்தினார் சஹால்

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்: பும்ராவை முந்தினார் சஹால்
20 ஓவர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் சஹால் முதலிடம் பிடித்துள்ளார்.
அகமதாபாத்,

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில்  சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் முதலிடம் பிடித்தார். நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பட்லர் விக்கெட் வீழ்த்திய சஹால், 20 ஓவர்கள் போட்டியில் 60 விக்கெட்டை வீழ்த்தினார். 

இதன் மூலம், 50 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பும்ராவை சஹால் பின்னுக்கு தள்ளியுள்ளார். 46 போட்டிகளில் விளையாடியுள்ள சஹால், 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 20 ஓவர் போட்டிகளில் சஹாலின் எகனாமி 24.75 ஆகும். பந்து வீச்சு சராசரி ஓவருக்கு 8.34- ரன்களாகும்.  

அதேபோல், யுஸ்வேந்திர சஹாலுக்கு நேற்றைய போட்டி 100-வது சர்வதேச போட்டியாகும்.  54  ஒருநாள் போட்டிகளிலும் 46 -20 ஓவர் போட்டிகளிலும் சஹால் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் போட்டியில் 79 பந்துகளில் இரட்டை சதம் அடித்து டெல்லி வீரர் சாதனை
டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுபோத் பாட்டி உள்ளூரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி ஒன்றில் 79 பந்துகளில் 205 ரன்கள் குவித்து சாதனைப் படைத்து உள்ளார்.
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி; தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்காஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.