கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக பிராத்வெய்ட் நியமனம் + "||" + West Indies As captain of the Test team Broadweight appointment

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக பிராத்வெய்ட் நியமனம்

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக பிராத்வெய்ட் நியமனம்
வெஸ்ட்இண்டீஸ் அணி 37 டெஸ்ட் போட்டியில் ஆடி 11 வெற்றி, 5 டிரா, 21 தோல்வி கண்டது.
ஆன்டிகுவா, 

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜாசன் ஹோல்டர் 2015-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். அவரது தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி 37 டெஸ்ட் போட்டியில் ஆடி 11 வெற்றி, 5 டிரா, 21 தோல்வி கண்டது. கடந்த மாதம் நடந்த வங்காளதேச டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக ஜாசன் ஹோல்டர் விலகினார். இதனால் அந்த தொடருக்கு தொடக்க ஆட்டக்காரர் கிரேக் பிராத்வெய்ட் கேப்டனாக செயல்பட்டார். அவரது தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக 28 வயதான கிரேக் பிராத்வெய்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருகிற 21-ந் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். பிராத்வெய்ட் இதுவரை 66 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8 சதம் உள்பட 3,876 ரன்னும், 10 ஒருநாள் போட்டிகளில் 278 ரன்னும் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது.
2. இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.