தோல்வி குறித்து கோலி கருத்து


தோல்வி குறித்து கோலி கருத்து
x
தினத்தந்தி 13 March 2021 4:36 AM GMT (Updated: 13 March 2021 4:36 AM GMT)

ஆடுகளத்தில் எந்த மாதிரி ஆட வேண்டும் என்பது போதுமான அளவுக்கு எங்களுக்கு தெரியாமல் போய் விட்டது.

ஆமதாபாத், 

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இத்தகைய தன்மை கொண்ட ஆடுகளத்தில் எந்த மாதிரி ஆட வேண்டும் என்பது போதுமான அளவுக்கு எங்களுக்கு தெரியாமல் போய் விட்டது. சில ஷாட்டுகள் மோசமாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனாக இதை சரி செய்தாக வேண்டும். தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அடுத்த ஆட்டத்தில் இன்னும் தீவிரத்துடன் செயல்பட்டு சரிவில் இருந்து மீள வேண்டியது முக்கியம். மைதானத்தில் எந்த பகுதியில் பந்தை விரட்ட வேண்டும் என்ற தெளிவான திட்டமிடலுடன் ஆட வேண்டும். ஏனெனில் இந்த ஆடுகளத்தில் நாம் நினைத்த மாதிரி ஷாட்டுகளை அடிக்க முடியவில்லை. ஆடுகளம் சாதகமாக இருந்திருந்தால் முதல் பந்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட முடியும். களத்தில் போதுமான நேரம் நின்று ஆடுகளத்தன்மையை கணிக்க தவறி விட்டோம். இதை ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் சிறப்பாக செய்தார். 150-160 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் விக்கெட்டுகளை வேகமாக இழந்ததால் அதை எட்ட முடியாமல் போய் விட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக நடக்கும் இந்த தொடரில் சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்கிறோம். அதே சமயம் இங்கிலாந்தை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்றார்.

Next Story