இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீச்சு: இந்திய அணிக்கு அபராதம்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீச்சு: இந்திய அணிக்கு  அபராதம்
x
தினத்தந்தி 16 March 2021 1:01 AM GMT (Updated: 16 March 2021 1:01 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இந்திய அணி ஒரு ஓவர் குறைவாக வீசியதையடுத்து கள நடுவர்கள்  நடவடிக்கை எடுத்தனர். இந்திய கேப்டன் கோலி  தாமதமாக பந்து வீசியதை ஒப்புக்கொண்டார். தவறை ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததையடுத்து, இதுபற்றி மேற்கொண்டு விசாரனை நடைபெறவில்லை.

Next Story