20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று தள்ளிவைப்பு


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 19 March 2021 2:58 AM GMT (Updated: 19 March 2021 2:58 AM GMT)

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது.

துபாய், 

அதைத் தொடர்ந்து 8-வது 20 ஓவர் உலககோப்பை போட்டி அடுத்த ஆண்டு (2022) ஆஸ்திரேலியாவில் நடத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்று அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பக்ரைன், குவைத், மாலத்தீவு, கத்தார், சவுதி அரேபியா ஆகிய அணிகள் பங்கேற்க இருந்தன. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதி சுற்று அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. இதே போல் ஆப்பிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று ‘ஏ’, ‘பி’ என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திபோடப்பட்டுள்ளது.

Next Story