கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயம் காரணமாக இங். வீரர் ஆர்ச்சர் விலகல் + "||" + India vs England: Jofra Archer Ruled Out Of ODI Series vs India, To Miss Start Of IPL 2021

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயம் காரணமாக இங். வீரர் ஆர்ச்சர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயம் காரணமாக இங். வீரர் ஆர்ச்சர் விலகல்
இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக ஆர்ச்சருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.  முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆர்ச்சர் உடனடியாக பிரிட்டன் திரும்புகிறார்.

ஒருநாள் தொடருக்கான  இங்கிலாந்து அணி:

இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோனாதன் பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், மேட் பார்கின்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, மார்க் வுட். இதுதவிர கூடுதல் வீரர்களாக ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான் ஆகியோரும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ளனர்.

காயம் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்காத ஆர்ச்சர், ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களிலும் விளையாட மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு 200 ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைத்தது தென் கொரியா
தென் கொரியாவில் இருந்து விமானம் மூலமாக 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2. இந்தியாவில் நேற்று வரை 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் நேற்று வரை கொரோனா தடுப்பூசியின் 17 கோடி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை சற்று குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரே நாளில் நேற்று 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.