கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி நடக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் + "||" + There is no plan to vaccinate players against corona during the IPL match - Indian Cricket Board

ஐ.பி.எல். போட்டி நடக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்

ஐ.பி.எல். போட்டி நடக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்
ஐ.பி.எல். போட்டி நடக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மும்பை, 

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை இந்தியாவில் 6 நகரங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. தங்கள் அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் சமீபத்தில் வலியுறுத்தியது. 

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டித் தொடரின் போது எந்த அணி வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இல்லை என்று 8 அணிகளின் நிர்வாகங்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரியப்படுத்தியுள்ளது.

போட்டிக்கு முன்பாக வீரர்கள் 7 நாட்கள் கட்டாயம் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்துதலின் போது 3 நாட்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். வீரர் யாருக்காவது கொரோனா பாதிப்பு தென்பட்டால் குறைந்தது 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இ்ந்திய வீரர்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை. நேரடியாக தங்களது ஐ.பி.எல். அணியுடன் இணைந்து கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை உன்னிப்பாக கண்காணிக்க சிறப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
2. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசு: இந்திய ஒலிம்பிக் சங்கம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
3. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும்
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
4. இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5. இந்தியாவில் 5 வது பெரிய மாநிலமான தமிழகத்திற்கு குறைந்த அளவு தடுப்பூசியே ஒதுக்கீடு...! முழு விவரம்
இந்தியாவில் 5 வது பெரிய மாநிலமான தமிழகம், அதன் மக்கள் தொகைக்கு தகுதியான தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பெறவில்லை.