கிரிக்கெட்

சாலை பாதுகாப்பு கிரிக்கெட்டில் தெண்டுல்கர் அணி ‘சாம்பியன்’ + "||" + Road Safety World Series final: Tendulkar's India Legends defeat Sri Lanka Legends by 14 runs to lift title

சாலை பாதுகாப்பு கிரிக்கெட்டில் தெண்டுல்கர் அணி ‘சாம்பியன்’

சாலை பாதுகாப்பு கிரிக்கெட்டில் தெண்டுல்கர் அணி ‘சாம்பியன்’
சாலை பாதுகாப்பு கிரிக்கெட்டில் தெண்டுல்கர் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது
மும்பை, 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி, தில்ஷன் தலைமையிலான இலங்கை ஜாம்பவான் அணியை சந்தித்தது. 

இதில் முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. யுவராஜ்சிங் 60 ரன்களும் (41 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), யூசுப்பதான் 62 ரன்களும் (36 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) நொறுக்கினர். கேப்டன் தெண்டுல்கர் தனது பங்குக்கு 30 ரன்கள் எடுத்தார். 

அடுத்து களம் கண்ட இலங்கை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.