கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க ஆட்டக்காரர்கள் யார்? விராட் கோலி பதில் + "||" + ‘They will definitely start’: Kohli names the opening combination for 1st ODI

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க ஆட்டக்காரர்கள் யார்? விராட் கோலி பதில்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க ஆட்டக்காரர்கள் யார்? விராட் கோலி பதில்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி,இந்திய அணியை பழி தீர்க்க காத்துக்கொண்டிருக்கிறது. பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என்று தெரிகிறது. 

இந்த நிலையில், மெய்நிகர் முறையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-  ஒருநாள் போட்டியை பொருத்தவரையில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவனும்தான் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள். 

ஒருவீரர் கடுமையான சூழலை எதிர்கொள்ளும்போது அவரை எப்படி கையாள்வது என்பது அணியில் எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து நல்ல மனநிலையிலேயே வைத்திருப்போம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிதாக 31,564 கொரோனா பாதிப்பு: மேலும் 203 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தின் புதிய கொரோனா பயண விதிகள் இந்தியர்கள் பாதிப்பு ; இந்தியா பேச்சு வார்த்தை
இங்கிலாந்து வரும் இந்திய பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற இங்கிலாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
3. இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 36,100 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.