கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது + "||" + First Test against West Indies: Sri Lanka rolled to 169

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது.
ஆன்டிகுவா, 

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. 

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணி, வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 169 ரன்னில் சுருண்டது. 

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே 70 ரன்னும், விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 32 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினார்கள். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், கெமார் ரோச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பிராத்வெய்ட் 3 ரன்னுடனும், ஜான் கேம்பெல் 7 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 88 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 45 ரன்களும், ஜான் கேம்பெல் 42 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக சுரங்கா லக்மல் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
2. வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக பிராத்வெய்ட் நியமனம்
வெஸ்ட்இண்டீஸ் அணி 37 டெஸ்ட் போட்டியில் ஆடி 11 வெற்றி, 5 டிரா, 21 தோல்வி கண்டது.